Sunday, October 13, 2013

காவக்காதல் ...

நேரம் இரவு 11.00 மணியை தாண்டிக்கொண்டிருந்தது , வழக்கம் போல ஊர்மணியத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன் ... வழியில் "அத்தைகளும் மாமாக்களூம்" நின்றுயிருந்தார்கள் "தம்பி வண்டிய நிறுத்து " ... "வண்டிய நிறுத்து " என்று வழக்கமான தோரணையில் சொன்னவுடன் வண்டியை ஓரம் நிறுத்திவிட்டு காகிதக் குப்பைகளை கொண்டு சென்று காட்டினேன் "இத யாருபா கேட்டா " ,,நான் எதிர்பார்த்தது தான் ... "என்ன சார் வேணும் ?"  என்று தெரிந்து கொண்டே நானும் கேட்டேன் .... ""இங்க வா கிட்ட வந்து ஊது " என்றார் ஒரு "ஆய்"வாளர் ... "ஊதி விட்டு " ... "பல்லு மட்டும் தான் சார் தெய்க்கல மத்தபடி Drunk and drive ல இல்ல சார் " என்றேன் .. மாமிகளின் கூட்டத்தில் இருந்து ஒரு சிரிப்பு சத்தம் .. வந்த திசை நொக்கி திரும்பினேன் ... காக்கியும் காமடி பிசும் என்று தலைப்பு வைக்கும் அளவுக்கு அந்த உடையில் ஒளிந்திருந்த ஒரு பெண் ... அவள் பார்வை என்மீது தான் இருந்தது , நானும் அவளை தான் பார்த்து கொண்டிருந்தேன் ("அத இப்படிக்கூட சொல்லலாம் - mind voice").
பிறகு என் முன்னே ஒரு godzilla சி இல்ல இல்ல head constable அக்கா , சாலையின் அந்த புறம் இருந்த 6 மாடி கட்டிடத்தை மறைக்கும் அளவுக்கு ஒரு உருவம் ... "தம்பி details குடுத்துடு போபா" என்று தனது கந்தர்வ குரலில் கூவினார்...ஒ அப்போ இது மாச கடைசி " வசூல் operation " இல்ல போலனு மனதில் நினைத்து சிரித்து கொண்டேன்.
       
              " உங்க lincence ச கூடுங்க " என்று வலிய வந்து கேட்டது அந்த கண்ணிய மிகு காவல்துறை கன்னி ...என்னிடம் இருந்த கருப்பு வெள்ளை duplicate லைசென்சை... உங்க பேர் என்ன ?"  .. "அதுல தான் போட்டு இருக்கே மேடம் ..."  "தெரியுது இருந்தாலும் சொல்லுங்க " -- குறுக்கு விசாரணை பண்ணுறாங்களாம் ... என்று மனதில் நினைத்து கொண்டு என் பெயரை சொன்னேன் .." வீடு எங்க சார் ... address சொல்லுங்க"  என்றால் அவள் ...பின்பு எதோ தயங்குவது போல் ஒரு பாவனை செய்து " மொபைல் நம்பர் ...என்று இழுத்தால்...சொன்னேன் ...பிறகு அதை தொடர்ந்து ஒரு புன்னகை ..நான் அதை எதிர்பார்க்கவில்லை .. கொஞ்சம் பெரிதாகவே இருந்தாது...

              நான் திரும்பினேன் காகிதகுப்பைகளோடு ,அனைத்தையும் வண்டியின் உள்ளே வைத்து விட்டு வண்டியை எடுக்கும் பொழுது அவள் என்னை காட்டி அந்த "அத்தையிடம்" எதோ சொல்லிக் கொண்டிருந்தால் ..சரி என்பது போல "அத்தையும்" தலையாட்டினால் பின்பு நான் அங்கிருந்து நகரத்தொடங்கினேன் ..என் எதிரே வந்து என்னை "அத்தை" வழிமறித்தால்  " தம்பி கோயம்பேடு வழியாதன போர ? "  ... "ஆமாங்க"  ஒரு வார்த்தை பதில் அளித்து நின்றேன். "இந்த constable ல கொஞ்சம் அங்க இறக்கி விட்டுரியபா ? "  "சரிங்க " - பதில்.
             அவள் சட்டென்று அங்கே நிறுத்தப்பட்டிருந்த பழைய காவல்துறை ஜிப்பில் இருந்து ஒரு பெரிய தோல்பட்டை பையை மாட்டிக்கொண்டு வந்தாள் ..."அக்கா வரேங்கா ... " என்று சொல்லிவிட்டு என் பின்னே வந்து ஒரு கால் வைத்து அமர்ந்தால் .... "போங்க " என்ற ஒரு குரல் கேட்டவுடன் கிளம்பினேன் , இரண்டு நிறுத்தங்களை தாண்டினால் வந்து விடும் அதனால் நிதனமாகவே செலுத்தினேன் ... சரியாக ஒரு 30 வினாடி தாண்டி இருக்கும் .. "நீங்க எங்க வேலை பாக்குறிங்க " பின் புறம் இருந்து ஒரு கேள்வி அவளிடம் இருந்து வந்தது ... அழகான பெண் சரி பதில் சொல்வோம் என்று மனதில் தோன்றியது ... "நா ஒரு சப்ட்வெர் எஞ்சினியர் ங்கா " என்றேன் ...
"அப்போ நீறைய சம்பதிப்பிங்க !!! "
"உங்க அளவு ல இல்லங்க "
"Hello நான் அந்த மாதிரி police இல்ல"  - குரல் கொஞ்சம் எழுந்தது ...
" இல்லங்க பொதுவா சொன்னேன் " ---
"சப்ட்வெர் எஞ்சினியர் னா ..... அப்போ நீங்க நீறைய பொணுங்க கூட சுத்துவிங்கலா ..." என்று ஒரு வாக்கியம் அளித்தாள்
"Hello நான் அந்த மாதிரி ஆள் இல்ல " குரல் கொஞ்சம் எழுந்தது ...
" இல்லங்க பொதுவா சொன்னேன் " --- என்று மூக்குடைத்தால்...அதை நான் எதிர்பார்க்கவில்லை
இனிபேசினால் கவணமாக பேச வேண்டும் என்று மூளைக்கு எச்சரித்தேன் ... சிரிய அமைதிக்கு பின்
"நான் சும்மா விளையட்டுகு தான் சொன்னேன் serious ச எடுத்துகதிங்க" என்றாள்
"பராவயில்ல" என்றேன் ..

சொல்லிவிட்டு நிமிர்தேன் ... சிவப்பு விலக்கு ... சலையை மக்கள் கடந்து கொண்டுஇருந்தானர் ....
"எங்க ஊருக்கு போறிங்க லா "  - என்றேன்
"அமாங்க , ... இன்னைக்கு 9 மணி வரைக்கும் தான் duty நு சொன்னாங்க அப்புறம் இவாலோ நேரம் நிக்கவச்சுடன் அந்த கரிவாயன் " என்று தன் "ஆய்"வாளரை புகழ்ந்தால்
"எந்த ஊரு நீங்க ? " - என்றேன்
"கும்பக்கோணம் ...என்று அரம்பித்து ,,,தன் ஊர் பெருமை பேசிக்கொண்டிருந்தால்..
சிவப்பு விலகியது ...வண்டியை நேரே செலுத்தினேன் ... பேருந்து நிலையத்தின் வாசல் ஆருகே நிருத்தினேன் ...
இறங்கிய பின்னர் "ரொம்ப thanks ங்க" என்றாள்
புன்னகைத்தவாரே சரி என்று தலையாட்டினேன் ..
செல்லத்துவங்கினாள் பின்பு திறும்பி பார்த்து ... " போய்டு மெசேஞ் பண்றேன் நு " சொல்லிட்டு சிரித்து கொண்டே போனால் ...
தலையாட்டி கொண்டே யொசித்தேன் ...இவ எதுக்கு நாமக்கு மெசேஞ்  பண்ணுறேனு சொல்லிட்டு போரா ....
ஒரு flow ல சொல்லி இருப்பா ... மறுபடியும் அவலை கண்கள் தேடியது ..... ஆனால் அந்த கூட்டதில் தென்படவில்லை .........

தொடரும் .....

4 comments:

  1. Bhuvan..... Asathal & i felt describing the personality could be even more humorous if you opt for illakkiya nayam..

    ReplyDelete
  2. Good story does it really happen?

    ReplyDelete