Sunday, November 18, 2012

நட்டுனு ஒரு நல்லவ ...இல்ல இல்ல ரெம்ப நல்லவ.. part-2



இதன் முதல் பாகத்தை படிக்கதவர்கள் ... அதை படித்துவிட்டு தொடரவும்...:)



"டேய் ஒரு ஐடியா என்னடா ... என்று அனைவரும் கேட்க..
    அனைத்து தலைகளும் ஒன்று கூடி நான்கு தலை ராவணன் ஆனார்கள். "டேய் எதோ ஐடியானு சொன்னியே என்னடா" என்று ஒரு குரல் "யாரு டா இந்த ஐஞ்சாவுது தலை டேய் நட்டு உனக்கு எதிரா தான் நாங்க திட்டம் திட்டுறோம் இத நீயே ஒட்டு கேட்குறியா போட தூர.." என்று நடராஜனை துரத்தினான் புவன். "டேய் குரு" என்று குருவின் காதில் எதோ கிசு கிசு தான் "டேய் புவா கொஞ்சம் சத்தமா சொல்லுடா காது ஈரமா தான் டா ஆகுது, எதுவும் கேட்கல டா" ,,, இது கதைக்கு ஆகாது எல்லாரும் வெளிய வாங்க அங்க சொல்றேன்" என்று அரையின் வெளியே வந்தனர், "சரி இங்க பாருங்க , யாராவது ஒருத்தர் உள்ள போய் பூட்டு சாவிய எடுத்துட்டு வாங்க அந்த "யானை குட்டிய" உள்ளயே வச்சு பூட்டிவோம், அப்புறம் கொஞ்ச நேரம் பிளிறுவான் அப்புறம் 9.30 மணிக்கு காதவ திறப்போம் ... அதுக்கு அப்புறம் காலேஜ்க்கு போக முடியாது கேட் மூடிறுவாங்க, அதுக்கு அப்புறம் என்ன லைட்ட அடிப்பான் வாங்கிகலாம்" என்றான் புவன் ... "லைட்ட அடிப்பான் ...ம்ம்ம்ம் , ரைட்டு விடு" - சுரே...
    "எங்கிட்ட ஒரு ஐடியா இருக்கு" என்றான் சோலை ... "என்னடா " - சுரே "இது என்னது" தன்னிடம் இருந்த ஒன்றை அனைவருக்கும் காண்பித்தான்.  "செருப்பு" - குரு "இப்போ இதை ஒளிச்சு வைச்சுடா நட்டு எப்படி செருப்பு போடுவான் ??? எப்படி காலேஜ்க்கு போவான்" என்று ஒரு பழக்கபட்ட slang ல சொன்னான் சோலை... "மூக்கு கொஞ்சம் கொடப்பா இருந்த இப்படி தான் யோசிக்க தோணும்" என்று கடுப்பானன் சுரே. "டேய் இருட இதையும் plan ல சேர்த்துக்கலாம் " என்றான் புவன். "டேய் இதையா" - குரு . "ஆமா டா ஆனால் செருப்பு மட்டுமில்லாம shoe வையும் சேர்த்து ஒளிச்சு வைச்சிருவோம், என்னா நம்ம செருப்பையோ shoe வையோ நட்டு போட முடியாது " (ஏன்னா நட்டுக்கு அவ்வளவு "சின்ன காலு", கவர்மேண்டு concrete கரண்ட் கம்பம் மாதிரி இருக்கும் , அவன் செருப்பு கடைக்கு போன எல்லா காடைகாரங்களும் ஒன்னா சொல்லுர ஒரே வார்த்தை "இந்த size ல வராது சார்" 12,13 லாம் தாண்டி போகுர சைஸ் அது) இதை புவன் சொன்னவுடன் அனைவர் முகத்திலும் ஒரு நம்பியார் சாயல்.....
     "சரி சோலை shoeவும் , செருப்பும் உன் department டு அப்புறம் பூட்டு சுரே உன் department டு " என்று எதோ கடலுக்குள் இருந்து வரப்போகும் காட்சில்லாவை பிடிக்க திட்டம் தீட்டுவது போல தீட்டு தீட்டுணு தீட்டிக்கொண்டிருண்டிருந்தான் புவன் ... "சரிடா நீ போய் அவன் என்ன பண்ணுறானு பாரு நாங்க ரெடி ஆகிக்கிறோம்" என்றான் சுரே ..."நட்டு ......... நட்டு ....எங்கபா இருக்க ; பாரு காட்டன் சட்டை போட்ட காட்டெரும மாதிரி எதோ நோண்டிக்கிட்டு இருக்கு" - புவன் "சரி நகரு நான் போரேன்" என்றான் நட்டு..."கண்ணு 8.30 - 10.00 இராகு காலம் இப்போ நீ போகக்கூடாது " என்றான் புவன், நட்டு ..புவனை பார்த்து பலமாக மூச்சு விட்டான், Mortein spray யில் மயங்கிய கொசு போல மல்லாக்க விழுந்த புவனை கடந்து சென்றுக்கொண்டே இருந்தான் நட்டு ... "டேய் ஏன்டா என்ன அடுச்ச" என்று கேட்டு கொண்டே நடராஜனை பின் தொடர்ந்தான் புவன். "டேய் இங்க இருந்த செருப்பு எங்கடா" என்று தெலுங்கு பட வில்லனை போல அலறினான் நட்டு .." ஹ ஹ ஹ ஹ  எனக்கு தெரியாது ...நண்பர்கலே உங்களுக்கு தெரியுமா " என்றான் புவன் .. "எங்களுக்கும் தெரியாதே" என்று ஒரு கோரசாக வந்தது பதில். தன் நண்பர்களை சன்னலுக்கு அந்த பக்கம்  நிற்பதை பார்த்த புவன் .."ஆமா டா ஏன் எல்லாரும் வெளிய நிக்குறீங்க " - புவன் . "நீ தான் டா கதவ பூட்ட சொன்ன" என்றான் சுரே .." ஏன் டா என்னையும் இந்த காட்ஸில்லாவோட கூட வைச்சு பூட்டுனிங்க "- புவன்.
     "என்னது கதவு பூட்டியிருக்க டேய்ய்ய்ய்ய்ய்ய் மரியாதையா திறந்துடுங்க இல்லலலலலல" என்று ஒரு கிங்காங் டிரைலாரையே ஓட்டினான் நட்டு ...." மறுபடியும் ஒரு கோரஸ் சிரிப்பு ஹ ஹ ஹஹ ஹ ஹ ஹ என்று அவனை மேலும் கடுப்பாக்கியது.... என்ன செய்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ..Container லாரி போல உருண்டான் ...கடைசியில் ஹ ஹ ஹ ஹ என்று கொடுரமாக சிரித்தான்..." என்ன நட்டு லூசயிட்டியா" என்றான் புவன். "டாய்ய்ய்ய்ய்" என்று புவனின் மீது பாய்ந்தான் நட்டு ..."மச்சி இத பார்த்த கொசுவும் யானையும் WWF Cage match போடுற மாதிரியில்ல" என்று ரொம்ப சவகாசமாய் வெளியே பேசிக்கொண்டிருந்தான் சுரே..."டேய் காப்பத்துங்க டா டேய் காப்பத்துங்க டா" என்ற புவனின் கூக்குரலை .,,,,எதோ "America's funny video" போல பார்த்து ரசித்து கொண்டிருந்தனர். நட்டின் விரல் இடுக்கில் சிக்கிய புவன் துடித்து கொண்டிருந்தன் .. "டேய் மரியதைய கதவ திறந்துடுங்க இல்ல ,, இவன் அவ்வளவு தான் ..." என்று உறுமிக்கொண்டிருந்தன் நட்டு ... "டேய் கபோதிகளா காப்பாத்துங்க டா ...இந்த பண்ணி என்ன மேல அனுப்பிட  போறான்" - புவன் ... "மச்சி கொல கேஸ் ஆகிடுமோ ..." என்று Defence வக்கில் போல சுரேந்தரிடம் ஆலோசித்து கொண்டிருந்தான் குரு... "என்ன கொல கேஸா ...இந்த பண்ணடைங்களுக்கு ...இந்த காட்டு பண்ணியே தேவலாம் போல " என்று புலாம்பிக்கொண்டிருந்தான் புவன்.. " சரி மச்சி திறந்து விட்டுடலாம் ..கொல கில பண்ணிட போறான் ..." என்று மத்திய அரசு போல கடைசியாய் ஒரு முடிவுக்கு வந்தனர் ..." அப்படி சட்டு புட்டுனு முடிவெடுங்கடா பக்கி " -புவன்..
     குரு கதவை திறந்தான்... பேரரசு படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு ஒடுவது போல நட்டு ஒடினான்... "நம்ம பிளன்ல தண்டமா போச்சு" என்று வருத்த பட்டான் சோலை ... "விடுடா ..bulk க இருக்குரவன் ல கண்டிப்பா bulb வாங்குவான் டா" ...என்று ஆறுதல் சொன்னான் புவன்....

மாலை : 5 மணி
    "என்ன நட்டு காலை ல "தில்" விக்ரம் மாதிரி போன இப்போ செத்து போன சக்கிரம் மாதிரி வர" என்று புவன் முடிப்பதுக்குல் ..."மச்சி அந்த பிரங்கி மூக்கன் (lecturer) லீவ் போட்டுடான் டா" என்று சொன்ன உடன் ..."ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ என்ற ஒரு கோரஸ் சிரிப்பு விண்ணை பிளந்தது ! ....முற்றும்

Wednesday, October 24, 2012

நட்டுனு ஒரு நல்லவ ...இல்ல இல்ல ரெம்ப நல்லவ


         "டேய் விடியக்காத்தால 8.30 மணிக்கு யார்டா லைட்ட போட்டது" தூங்கி கொண்டிருந்த போர்வைக்குள் ஊடுறுவிய வெளிச்சத்தில் தன் தூக்கம் கலைந்த புவன், நேரம் என்ன என்று தன் நண்பனின் கைபேசியில் பார்த்து உலறிக் கொண்டிருந்த்தான், " டேய் நட்டு என்னடா பண்ணிக்கிட்டு இருக்க ! "  srilankan cheerleader கூட சின்னமன்னூர் ஜமின் ஓடிவிட்டது போல அதிர்ச்சியடைந்தான் புவன்.... "college கு டா" என்றான் நட்டு , "என்னது college கா" "என்னது college கா" "என்னது college கா" , தான் பேசியதின் எதிர் ஒளியோ என்று திரும்பி பார்த்தான் புவன், அது தன்னுடன் தூங்கி கொண்டிருந்த "சக" "சோம்பேரிகள்" அவலக்குரல் என்று அறிந்தான்.
       "டேய் காலங்காலமா இந்த சங்கத்துல எடுக்குற முடிவுக்கு அத்தன பேரும் கட்டுபடும் போது நீ பண்றது சங்கத்தோட விதிய மீறுற மாதிரி இருக்கு நட்டு" என்ற புவனுடைய குரலுக்கு ... "உனக்கென்ன படையப்பா சிவாஜி கணேசன்னு நெனப்பா மூடிட்டு தூங்கு டா சோ சோ " (சோத்துக்கு சோம்பேரிடா நீ என்பதை தான் சோ சோ என்று ரொம்ப மரியாதையோட சொல்லுவா இந்த நட்டு), தூங்கி கொண்டு இருந்த சுரே , குரு, சோலை சங்கத்தின் சக சோம்பேரிகளும் சுயநினைவுக்கு வந்தனர். " என்டா இவனுக்கு என்ன ஆச்சு நேத்து கூட நல்லத்தானே இருந்தான், காலைல என்டா corporation குப்ப லாரில இருக்குற கரப்பாபூச்சி மாதிரி சுத்தினு இருக்கான்" என்று தன் குழப்பத்தை தெளிவு படுத்த வேண்டி கேட்டான் சுரே என்கின்ற சுரேந்தர்.
          "நட்டு இன்னைக்கு நீ காலேஜ் போன "பீரங்கி மூக்கன்" assignment கேட்பாண்டா" சோ சோ வின் குரலுக்கு, "என்னது assignment டா" என்று அரைபாடி வண்டியின் horn போன்ற குரலுடன் அலரினான் சோலை....."எப்பொடா குடுத்தாங்க"   அது உனக்கு தெரியாதுடா சோலை அப்போ நீ class ல நல்ல துங்கிட்டு இருந்த என்றான் புவன் ... ஆனால் எந்த சலனமும் நட்டி'ன் முகத்தில் தென்படவில்லை .... "என்னடா நட்டு ரெம்ப அமைதியா அவன் வேலைய பாக்குறான், ஒரு வேலை நைட்டு முழிச்சி assignment எழுதியிருப்பானோ" என்று ஒரு போக்ரான் அனுகுண்டை சப்ஜக்டில் லொட் செய்தான் ..குரு.. அனைவரின் முகத்திலும் ஒர் மிக பெரிய அச்சம் ...ஒரு வேலை இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்து இருக்குமோ என்று .... "ஆமா டா நான் assignment ட நேத்து நைட்டு எழுதிடேன்" என்று ஒரு பிரளயதில் மௌனத்தை கலைத்தான் நட்டு ...
          "டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் " என்று தன் இதயத்தை பிடித்துக்கொண்டான் சோ சோ , "என்னது முடுச்சுட்டியா" என்று மறுபடியும் அதிர்ச்சி horn'னை போட்டான் சோலை. சுரே வோ சற்று விட்டால் அழுதுவிடும் நிலையில் இருந்தான், தன் குரலை செருமிக் கொண்டு பேச அரம்பித்தான் சுரே..."நட்டு நாம யாருமே assignment எழுதலங்குறதால தான் சங்கத்துக்கு லீவுனு நேத்தே அருவிசோம் அதையும் மீறி நீ இப்படி பண்றது சரியில்லடா " என்று sentiment touch கொடுத்தான் ..."டேய் இந்த மகுடிக்குலாம் மயங்காது டா இந்த மலைபாம்பு , சங்கம் சொங்கம்னு ...காலங்காத்தால comedy பண்றானுங்க" என்று நாயா கூட மதிக்காம தன் வேலையை பார்த்து கொண்டிருந்தான் ....
          இந்த சங்கம்னு சொல்லுறது புவன்,சுரே,குரு,நட்டு அப்புறம் இந்த சோலை ...இந்த 5 பேர் தாங்க..இந்த 5 பேரும் சேர்ந்து சங்கத்துக்கு லீவ்னு முடிவு பண்ணிட்டா அன்னைக்கு 5 பேரும் மட்டம் தான். ஆனா "மத்தவங்க வருவாங்கல வருவாங்கல வருவாங்கல" அப்படினு நினைக்குறிங்களா அதான் இல்ல ...இந்த புவனோட hostel கூட்டாளிங்க அசோக்கும் தினேஷ்ஷும் வரமட்டாங்க அப்புறம் சோலையொட கூட்டணி கட்சியான பழம்,மகேஷ்,அருள் இவனுங்களும் வர மட்டாங்க ,அப்புறம் பசங்களா bunk நு ஒரு message ஒரு பொண்ணுக்கு அனுப்புனா போதும் ஒவ்வொருத்தியா பரவி காட்டு தீ ய ஆகிடும் cho இது தான் சங்கத்தோட "Mass bunk" Master plan.
          ஆனா இப்போ இதுக்கு ஒரு பெரிய பிரச்சனை இவ்வளோ நேரம் சொன்ன அந்த "நட்டு" எங்கின்ற "நடராஜன்" இவனோட கடமை உணர்ச்சி பெட்ரோல் மாதிரிங்க அடிக்கடி ஏறும் லைட்ட சில சமயம் எறங்கும்....
          "இப்போ என்ன பண்றது ...." மனசுக்குள் ஒரு சதிவலையை பிண்ணி கொண்டிருந்தான் புவன் அனைவரின் முகத்திலும் ஒரு சிகப்பு ஒளி, அட crime build up பண்ணோம் வேற ஒண்ணும் இல்ல
           "டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ஒரு ஐடியா ..என்னடா ,,,,,,,,,,,,,,

தொடரும்....

Friday, October 5, 2012

பொடியன் ;)


காலை மணி 8.45 வீட்டு வேலைகளை கீதா அவசர அவசரமாக செய்து கொண்டிருந்தாள், தன்னை bus stand கு கொண்டு போய் விடும் "Driver" அவரது கணவர் 1st சிப்டு டுயுட்டீகு சென்றுவிட்டதால் தன்னுடைய நடராஜ சர்வீஸ்ல தான் என்று உணர்ந்து வேலைகளை துரித படுத்தி கொண்டுயிருந்தாள், "கடவுளே இன்னைகாவது 47D கடங்காரன் ஆபிஸ் கு லேட் ஆகாம கொண்டு போய் விடனும், ஏற்கனவே இருந்த ரெண்டு லேட் பர்மிஸனும் முடிஞ்சு போச்சு" என்று காலை பால்பாயசம் படைத்த கடவுளுக்கு மனு கொடுத்து கொண்டு இருந்தால்.
      "அம்மா இந்த புவன பாருமா என் ஸ்க்குள் யுனிபார்ம் ட்ரௌசெர தரமாட்டெங்குரான்" பெரியவன் பாபுவின் குரல் சமையலரையை அதிர வைத்தது, "உங்க கூட ஒரே ரொதனையா போச்சுடா, ஏண்டா என் உயிரா வாங்குறிங்கா" என்று உரத்த குரலோடு கீதா வந்தால்... "நான் உங்க உயிர இன்னிமேல் வங்க மாடேன் மா" என்று ரொம்ப அப்பாவியக சொன்னான் பெரியவன் ...சின்னவனை பார்த்து "அது அவனதுதான அதை ஏன்டா நீ எடுத்துகிட்டு குடுக்க மாடெங்குர" என்றால் கீதா. "அப்டியா" என்று கூறி திகைப்பதை போல அக்டிங்கை போட்டான் பொடியன் .... பொடியன் புவனுக்கு தெளிவாக தெரியும் அது தன் கால்சட்டை இல்லை என்பது, இருந்தும் அண்ணனை கடுப்பேத்துவதை டைம்பஸாகவே வைத்திருந்தான்.
      பஞ்சயத்தை முடித்துவிட்டு நிமிர்தால் மணி 9.20, இன்று 10 மணிக்குள் அலுவலகம் சென்றே ஆகவேண்டும் என்று மனது அடித்துக் கொண்டது, அப்பொழுது தான் T.V அடியில் அறை கம்பத்தில் பறக்கும் கொடி போல பறந்து கொண்டிருந்த சீட்டை பார்த்தாள், ஏடுத்து பார்த்தவுடனே ஞாபகம் வந்தது, அது நேற்று தன் கணவரின் நண்பர் யமுனாதரன் தன் மகளின் 10 ம் வகுப்பு தேர்வின் பதிவு எண், நேற்று " madam என் பொண்ணுக்கு ஒரு subject போயிடுச்சு நீங்க தான் எப்படியாவது ..... எதாவது செலவான கூட பரவயில்லை " என்று இழுத்தவுடன், எண்ணையில் விழுந்த கடுகாய் .. அதெல்லாம் என்னால செய்ய முடியதுங்க நீங்க போகலாம் என்றாள் அரசு தேர்வு துறை ஊழியரான கீதா...
      காகிதத்தை பார்த்த மறுநிமிடம் இது ஏன் இங்க இருக்கு என்று வெறுப்பாய் தூக்கி போட, பெரியவன்  "என்னமா இது" என்று கேட்டான், அது அந்த "யமுனாதரன் மடையன்" என்று சொல்லும் கனம், கதவு தட்ட பட பொடியன் ஒடி சென்று கதவை திறந்தான் "யாருடா புவன் அங்க" என்ற அம்மாவின் குரலுக்கு பொடியனின் பதில் குரல் "அதுவா யமுனாதார மடையன் மா" .... யமுனாதாரனின் முகத்தில் ஈயாடவில்லை .....:)