இதன் முதல் பாகத்தை படிக்கதவர்கள் ... அதை படித்துவிட்டு தொடரவும்...:)
"டேய் ஒரு ஐடியா என்னடா ... என்று அனைவரும் கேட்க..
அனைத்து தலைகளும் ஒன்று கூடி நான்கு தலை ராவணன் ஆனார்கள். "டேய் எதோ ஐடியானு சொன்னியே என்னடா" என்று ஒரு குரல் "யாரு டா இந்த ஐஞ்சாவுது தலை டேய் நட்டு உனக்கு எதிரா தான் நாங்க திட்டம் திட்டுறோம் இத நீயே ஒட்டு கேட்குறியா போட தூர.." என்று நடராஜனை துரத்தினான் புவன். "டேய் குரு" என்று குருவின் காதில் எதோ கிசு கிசு தான் "டேய் புவா கொஞ்சம் சத்தமா சொல்லுடா காது ஈரமா தான் டா ஆகுது, எதுவும் கேட்கல டா" ,,, இது கதைக்கு ஆகாது எல்லாரும் வெளிய வாங்க அங்க சொல்றேன்" என்று அரையின் வெளியே வந்தனர், "சரி இங்க பாருங்க , யாராவது ஒருத்தர் உள்ள போய் பூட்டு சாவிய எடுத்துட்டு வாங்க அந்த "யானை குட்டிய" உள்ளயே வச்சு பூட்டிவோம், அப்புறம் கொஞ்ச நேரம் பிளிறுவான் அப்புறம் 9.30 மணிக்கு காதவ திறப்போம் ... அதுக்கு அப்புறம் காலேஜ்க்கு போக முடியாது கேட் மூடிறுவாங்க, அதுக்கு அப்புறம் என்ன லைட்ட அடிப்பான் வாங்கிகலாம்" என்றான் புவன் ... "லைட்ட அடிப்பான் ...ம்ம்ம்ம் , ரைட்டு விடு" - சுரே...
"எங்கிட்ட ஒரு ஐடியா இருக்கு" என்றான் சோலை ... "என்னடா " - சுரே "இது என்னது" தன்னிடம் இருந்த ஒன்றை அனைவருக்கும் காண்பித்தான். "செருப்பு" - குரு "இப்போ இதை ஒளிச்சு வைச்சுடா நட்டு எப்படி செருப்பு போடுவான் ??? எப்படி காலேஜ்க்கு போவான்" என்று ஒரு பழக்கபட்ட slang ல சொன்னான் சோலை... "மூக்கு கொஞ்சம் கொடப்பா இருந்த இப்படி தான் யோசிக்க தோணும்" என்று கடுப்பானன் சுரே. "டேய் இருட இதையும் plan ல சேர்த்துக்கலாம் " என்றான் புவன். "டேய் இதையா" - குரு . "ஆமா டா ஆனால் செருப்பு மட்டுமில்லாம shoe வையும் சேர்த்து ஒளிச்சு வைச்சிருவோம், என்னா நம்ம செருப்பையோ shoe வையோ நட்டு போட முடியாது " (ஏன்னா நட்டுக்கு அவ்வளவு "சின்ன காலு", கவர்மேண்டு concrete கரண்ட் கம்பம் மாதிரி இருக்கும் , அவன் செருப்பு கடைக்கு போன எல்லா காடைகாரங்களும் ஒன்னா சொல்லுர ஒரே வார்த்தை "இந்த size ல வராது சார்" 12,13 லாம் தாண்டி போகுர சைஸ் அது) இதை புவன் சொன்னவுடன் அனைவர் முகத்திலும் ஒரு நம்பியார் சாயல்.....
"சரி சோலை shoeவும் , செருப்பும் உன் department டு அப்புறம் பூட்டு சுரே உன் department டு " என்று எதோ கடலுக்குள் இருந்து வரப்போகும் காட்சில்லாவை பிடிக்க திட்டம் தீட்டுவது போல தீட்டு தீட்டுணு தீட்டிக்கொண்டிருண்டிருந்தான் புவன் ... "சரிடா நீ போய் அவன் என்ன பண்ணுறானு பாரு நாங்க ரெடி ஆகிக்கிறோம்" என்றான் சுரே ..."நட்டு ......... நட்டு ....எங்கபா இருக்க ; பாரு காட்டன் சட்டை போட்ட காட்டெரும மாதிரி எதோ நோண்டிக்கிட்டு இருக்கு" - புவன் "சரி நகரு நான் போரேன்" என்றான் நட்டு..."கண்ணு 8.30 - 10.00 இராகு காலம் இப்போ நீ போகக்கூடாது " என்றான் புவன், நட்டு ..புவனை பார்த்து பலமாக மூச்சு விட்டான், Mortein spray யில் மயங்கிய கொசு போல மல்லாக்க விழுந்த புவனை கடந்து சென்றுக்கொண்டே இருந்தான் நட்டு ... "டேய் ஏன்டா என்ன அடுச்ச" என்று கேட்டு கொண்டே நடராஜனை பின் தொடர்ந்தான் புவன். "டேய் இங்க இருந்த செருப்பு எங்கடா" என்று தெலுங்கு பட வில்லனை போல அலறினான் நட்டு .." ஹ ஹ ஹ ஹ எனக்கு தெரியாது ...நண்பர்கலே உங்களுக்கு தெரியுமா " என்றான் புவன் .. "எங்களுக்கும் தெரியாதே" என்று ஒரு கோரசாக வந்தது பதில். தன் நண்பர்களை சன்னலுக்கு அந்த பக்கம் நிற்பதை பார்த்த புவன் .."ஆமா டா ஏன் எல்லாரும் வெளிய நிக்குறீங்க " - புவன் . "நீ தான் டா கதவ பூட்ட சொன்ன" என்றான் சுரே .." ஏன் டா என்னையும் இந்த காட்ஸில்லாவோட கூட வைச்சு பூட்டுனிங்க "- புவன்.
"என்னது கதவு பூட்டியிருக்க டேய்ய்ய்ய்ய்ய்ய் மரியாதையா திறந்துடுங்க இல்லலலலலல" என்று ஒரு கிங்காங் டிரைலாரையே ஓட்டினான் நட்டு ...." மறுபடியும் ஒரு கோரஸ் சிரிப்பு ஹ ஹ ஹஹ ஹ ஹ ஹ என்று அவனை மேலும் கடுப்பாக்கியது.... என்ன செய்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ..Container லாரி போல உருண்டான் ...கடைசியில் ஹ ஹ ஹ ஹ என்று கொடுரமாக சிரித்தான்..." என்ன நட்டு லூசயிட்டியா" என்றான் புவன். "டாய்ய்ய்ய்ய்" என்று புவனின் மீது பாய்ந்தான் நட்டு ..."மச்சி இத பார்த்த கொசுவும் யானையும் WWF Cage match போடுற மாதிரியில்ல" என்று ரொம்ப சவகாசமாய் வெளியே பேசிக்கொண்டிருந்தான் சுரே..."டேய் காப்பத்துங்க டா டேய் காப்பத்துங்க டா" என்ற புவனின் கூக்குரலை .,,,,எதோ "America's funny video" போல பார்த்து ரசித்து கொண்டிருந்தனர். நட்டின் விரல் இடுக்கில் சிக்கிய புவன் துடித்து கொண்டிருந்தன் .. "டேய் மரியதைய கதவ திறந்துடுங்க இல்ல ,, இவன் அவ்வளவு தான் ..." என்று உறுமிக்கொண்டிருந்தன் நட்டு ... "டேய் கபோதிகளா காப்பாத்துங்க டா ...இந்த பண்ணி என்ன மேல அனுப்பிட போறான்" - புவன் ... "மச்சி கொல கேஸ் ஆகிடுமோ ..." என்று Defence வக்கில் போல சுரேந்தரிடம் ஆலோசித்து கொண்டிருந்தான் குரு... "என்ன கொல கேஸா ...இந்த பண்ணடைங்களுக்கு ...இந்த காட்டு பண்ணியே தேவலாம் போல " என்று புலாம்பிக்கொண்டிருந்தான் புவன்.. " சரி மச்சி திறந்து விட்டுடலாம் ..கொல கில பண்ணிட போறான் ..." என்று மத்திய அரசு போல கடைசியாய் ஒரு முடிவுக்கு வந்தனர் ..." அப்படி சட்டு புட்டுனு முடிவெடுங்கடா பக்கி " -புவன்..
குரு கதவை திறந்தான்... பேரரசு படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு ஒடுவது போல நட்டு ஒடினான்... "நம்ம பிளன்ல தண்டமா போச்சு" என்று வருத்த பட்டான் சோலை ... "விடுடா ..bulk க இருக்குரவன் ல கண்டிப்பா bulb வாங்குவான் டா" ...என்று ஆறுதல் சொன்னான் புவன்....
மாலை : 5 மணி
"என்ன நட்டு காலை ல "தில்" விக்ரம் மாதிரி போன இப்போ செத்து போன சக்கிரம் மாதிரி வர" என்று புவன் முடிப்பதுக்குல் ..."மச்சி அந்த பிரங்கி மூக்கன் (lecturer) லீவ் போட்டுடான் டா" என்று சொன்ன உடன் ..."ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ என்ற ஒரு கோரஸ் சிரிப்பு விண்ணை பிளந்தது ! ....முற்றும்