Wednesday, October 24, 2012

நட்டுனு ஒரு நல்லவ ...இல்ல இல்ல ரெம்ப நல்லவ


         "டேய் விடியக்காத்தால 8.30 மணிக்கு யார்டா லைட்ட போட்டது" தூங்கி கொண்டிருந்த போர்வைக்குள் ஊடுறுவிய வெளிச்சத்தில் தன் தூக்கம் கலைந்த புவன், நேரம் என்ன என்று தன் நண்பனின் கைபேசியில் பார்த்து உலறிக் கொண்டிருந்த்தான், " டேய் நட்டு என்னடா பண்ணிக்கிட்டு இருக்க ! "  srilankan cheerleader கூட சின்னமன்னூர் ஜமின் ஓடிவிட்டது போல அதிர்ச்சியடைந்தான் புவன்.... "college கு டா" என்றான் நட்டு , "என்னது college கா" "என்னது college கா" "என்னது college கா" , தான் பேசியதின் எதிர் ஒளியோ என்று திரும்பி பார்த்தான் புவன், அது தன்னுடன் தூங்கி கொண்டிருந்த "சக" "சோம்பேரிகள்" அவலக்குரல் என்று அறிந்தான்.
       "டேய் காலங்காலமா இந்த சங்கத்துல எடுக்குற முடிவுக்கு அத்தன பேரும் கட்டுபடும் போது நீ பண்றது சங்கத்தோட விதிய மீறுற மாதிரி இருக்கு நட்டு" என்ற புவனுடைய குரலுக்கு ... "உனக்கென்ன படையப்பா சிவாஜி கணேசன்னு நெனப்பா மூடிட்டு தூங்கு டா சோ சோ " (சோத்துக்கு சோம்பேரிடா நீ என்பதை தான் சோ சோ என்று ரொம்ப மரியாதையோட சொல்லுவா இந்த நட்டு), தூங்கி கொண்டு இருந்த சுரே , குரு, சோலை சங்கத்தின் சக சோம்பேரிகளும் சுயநினைவுக்கு வந்தனர். " என்டா இவனுக்கு என்ன ஆச்சு நேத்து கூட நல்லத்தானே இருந்தான், காலைல என்டா corporation குப்ப லாரில இருக்குற கரப்பாபூச்சி மாதிரி சுத்தினு இருக்கான்" என்று தன் குழப்பத்தை தெளிவு படுத்த வேண்டி கேட்டான் சுரே என்கின்ற சுரேந்தர்.
          "நட்டு இன்னைக்கு நீ காலேஜ் போன "பீரங்கி மூக்கன்" assignment கேட்பாண்டா" சோ சோ வின் குரலுக்கு, "என்னது assignment டா" என்று அரைபாடி வண்டியின் horn போன்ற குரலுடன் அலரினான் சோலை....."எப்பொடா குடுத்தாங்க"   அது உனக்கு தெரியாதுடா சோலை அப்போ நீ class ல நல்ல துங்கிட்டு இருந்த என்றான் புவன் ... ஆனால் எந்த சலனமும் நட்டி'ன் முகத்தில் தென்படவில்லை .... "என்னடா நட்டு ரெம்ப அமைதியா அவன் வேலைய பாக்குறான், ஒரு வேலை நைட்டு முழிச்சி assignment எழுதியிருப்பானோ" என்று ஒரு போக்ரான் அனுகுண்டை சப்ஜக்டில் லொட் செய்தான் ..குரு.. அனைவரின் முகத்திலும் ஒர் மிக பெரிய அச்சம் ...ஒரு வேலை இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்து இருக்குமோ என்று .... "ஆமா டா நான் assignment ட நேத்து நைட்டு எழுதிடேன்" என்று ஒரு பிரளயதில் மௌனத்தை கலைத்தான் நட்டு ...
          "டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் " என்று தன் இதயத்தை பிடித்துக்கொண்டான் சோ சோ , "என்னது முடுச்சுட்டியா" என்று மறுபடியும் அதிர்ச்சி horn'னை போட்டான் சோலை. சுரே வோ சற்று விட்டால் அழுதுவிடும் நிலையில் இருந்தான், தன் குரலை செருமிக் கொண்டு பேச அரம்பித்தான் சுரே..."நட்டு நாம யாருமே assignment எழுதலங்குறதால தான் சங்கத்துக்கு லீவுனு நேத்தே அருவிசோம் அதையும் மீறி நீ இப்படி பண்றது சரியில்லடா " என்று sentiment touch கொடுத்தான் ..."டேய் இந்த மகுடிக்குலாம் மயங்காது டா இந்த மலைபாம்பு , சங்கம் சொங்கம்னு ...காலங்காத்தால comedy பண்றானுங்க" என்று நாயா கூட மதிக்காம தன் வேலையை பார்த்து கொண்டிருந்தான் ....
          இந்த சங்கம்னு சொல்லுறது புவன்,சுரே,குரு,நட்டு அப்புறம் இந்த சோலை ...இந்த 5 பேர் தாங்க..இந்த 5 பேரும் சேர்ந்து சங்கத்துக்கு லீவ்னு முடிவு பண்ணிட்டா அன்னைக்கு 5 பேரும் மட்டம் தான். ஆனா "மத்தவங்க வருவாங்கல வருவாங்கல வருவாங்கல" அப்படினு நினைக்குறிங்களா அதான் இல்ல ...இந்த புவனோட hostel கூட்டாளிங்க அசோக்கும் தினேஷ்ஷும் வரமட்டாங்க அப்புறம் சோலையொட கூட்டணி கட்சியான பழம்,மகேஷ்,அருள் இவனுங்களும் வர மட்டாங்க ,அப்புறம் பசங்களா bunk நு ஒரு message ஒரு பொண்ணுக்கு அனுப்புனா போதும் ஒவ்வொருத்தியா பரவி காட்டு தீ ய ஆகிடும் cho இது தான் சங்கத்தோட "Mass bunk" Master plan.
          ஆனா இப்போ இதுக்கு ஒரு பெரிய பிரச்சனை இவ்வளோ நேரம் சொன்ன அந்த "நட்டு" எங்கின்ற "நடராஜன்" இவனோட கடமை உணர்ச்சி பெட்ரோல் மாதிரிங்க அடிக்கடி ஏறும் லைட்ட சில சமயம் எறங்கும்....
          "இப்போ என்ன பண்றது ...." மனசுக்குள் ஒரு சதிவலையை பிண்ணி கொண்டிருந்தான் புவன் அனைவரின் முகத்திலும் ஒரு சிகப்பு ஒளி, அட crime build up பண்ணோம் வேற ஒண்ணும் இல்ல
           "டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ஒரு ஐடியா ..என்னடா ,,,,,,,,,,,,,,

தொடரும்....

3 comments:

  1. Ithu Kathai alla Nijam......... :)

    ReplyDelete
  2. Kathai enra peril than sarithirathai ezhuthum Bhuvan... Innum neraya nijangalai ethir pakrom unga kitta... :)

    ReplyDelete
  3. Dei... kollaatha da.. mudiyala..

    ReplyDelete